தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்கள்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
ராசிபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாணவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
விழுப்புரம்:
இந்திய ஊரக விளையாட்டுத்துறை சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் 3 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவ-மாணவிகளான பூங்கோதை, சித்தார் சிவம், இளமாறன், கனகஜோதி, சுதர்சன், ஶ்ரீராம், ரஞ்சித்குமார் ஆகியோரை விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இவர்களில் பூங்கோதை, இளமாறன், கனகஜோதி ஆகியோர் உலக அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story