திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மூழ்கியவர் கதி என்ன


திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மூழ்கியவர் கதி என்ன
x
தினத்தந்தி 29 April 2022 8:57 PM IST (Updated: 29 April 2022 8:57 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

திருக்கனூர்
திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றை  52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். 
இதுகுறித்து திருக்கனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆற்றில் மூழ்கியவர் யார்? அவரது கதி என்ன என்பது தெரியவில்லை.
இதற்கிடையே இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணி கைவிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட உள்ளனர்.

Next Story