தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி- கடலூர் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் இன்று புதுவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்டத்தில் 380 ஆண்டுகளாக ஒரு தலித் பேராயர் கூட நியமிக்கப்படவில்லை. இதனால் தலித் அல்லாத பேராயர் நியமனத்தை கண்டித்து தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் இன்று புதுவை சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் மேரிஜான் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தானியேல், செயல் தலைவர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்டத்தில் தலித் பேராயரை நியமிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story