பாரதியார்- செல்லம்மாள் ரத யாத்திரை
புதுவைக்கு வந்த பாரதியார்- செல்லம்மாள் ரத யாத்திரையை அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோர் வரவேற்றனா்.
மகாகவி பாரதியார் - செல்லம்மாள் இருவரையும் போற்றும் வகையில் அவர்களது 125-வது திருமண நாளையொட்டி தென்காசி மாவட்டம் கடையத்தில் அவர்களது உருவ சிலை நிறுவப்பட உள்ளது. செல்லம்மாளின் தோளில் கை வைத்த படியான, பாரதியாரின் 7 அடி உயர சிலை தயாரிக்கப்பட்டது. இந்த சிலை ரத ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 17-ந் தேதி ரத யாத்திரையாக தொடங்கியது. இந்த ரத யாத்திரை ஒவ்வொரு ஊர் வழியாக சென்று ஜூன் 1-ந்தேதி கடையத்தை அடைகிறது. ஜூன் 27-ந்தேதி பாரதியார்- செல்லம்மாள் திருமண நாளன்று சிலைகள் நிறுவப்படுகிறது.
இந்த ரத யாத்திரை இன்று மதியம் புதுவை ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்திற்கு வந்தது. இதனை அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோர் வரவேற்று, பாரதியார்- செல்லம்மாள் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கருவடிக்குப்பம், அஜந்தா சிக்னல், மணக்குள விநாயகர் கோவில் அண்ணாசாலை வழியாக ரதயாத்திரை நகரில் வலம் வந்தது. பின்னர் இன்று மாலை விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story