வீடு புகுந்து தாலிச்சங்கிலி பறிப்பு: ராணுவ வீரர், மனைவிக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் ஆறுதல்
வீடு புகுந்து தாலிச்சங்கிலி பறிக்கப்பட்ட வழக்கில் ராணுவ வீரர், அவரது மனைவியுடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். மேலும் மர்மநபரை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் பேரூர் கிராமம் குடித்தெருவை சேர்ந்தவர் நீலமேகம். மத்திய துணை ராணுவப் படை (சி.ஆர்.பி.எப்.) வீரரான இவர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பணியில் உள்ளார். இவரது மனைவி கலைவாணி (வயது 28) கடந்த 27-ந் தேதி இரவு பேரூரில் உள்ள வீட்டில் தனது மாமியாருடன் தூங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றார். இதில் காயமடைந்த கலைவாணி முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடனடியாக புலன் விசாரணையை தொடங்கினர்.
டி.ஜி.பி. ஆறுதல்
இந்நிலையில் ராணுவ வீரர் நீலமேகம், தனது வீட்டில் நடைபெற்ற தாலிச்சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து ஒரு வீடியோ பதிவில் பேசி, அதனை சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் வெளியிட்டார். அதில் “எனது வீட்டிற்கு பாதுகாப்பு இல்லாதபோது, எப்படி ராணுவத்தில் நிம்மதியாக பணி செய்ய முடியும். எனவே குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்-அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு வேண்டு கோள் விடுத்திருந்தார்.
வீடியோ பதிவு குறித்து தெரிந்தவுடன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பாதிக்கப்பட்ட கலைவாணி மற்றும் துணை ராணுவப் படை வீரர் நீலமேகம் ஆகியோரை தொலைபேசி வழியாக உடனடியாக தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறியதோடு, சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்ற உறுதிமொழியை அளித்துள்ளார்.
சிறப்பு தனிப்படை
அதன்படி, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 8 பேர் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தேக நபர்கள் சிலரிடம் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கலைவாணியை, போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்றும் உறுதி அளித்தார்.

Related Tags :
Next Story