சிவகங்கையில் விமர்சையாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்...!


சிவகங்கையில் விமர்சையாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்...!
x
தினத்தந்தி 30 April 2022 2:09 PM IST (Updated: 30 April 2022 2:09 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் புதுப்பட்டி-மேலூர் சாலையில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 63 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாடு வண்டி பந்தயம், நடுமாடு வண்டி பந்தயம், சின்ன மாடு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது. 

முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கீழவளவு சக்தி வண்டியும், 2-வது பரிசை பாலுவும், 3-வது பரிசை மணியும், 4-வது பரிசை வெள்ளநாயக்கன்பட்டி சீமான் ஆகியோர் வண்டிகள் பெற்றது.

பின்னர் நடைபெற்ற நடுமாடு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கள்ளந்திரி ஐந்துகோவில் சுவாமி வண்டியும், 2-வது பரிசை அண்ணாநகர் கணேஷ் போர்வெல் மற்றும் ஆளவிலாம்பட்டி முத்துலெட்சுமி வண்டியும், 3-வது பரிசை கணக்கன்பட்டி சற்குரு வண்டியும், 4-வது பரிசை மேலூர் கார்த்திகேயன் வண்டியும் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 19-வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருவாதவூர் புதுப்பட்டி சின்னச்சாமி வண்டியும், 2-வது பரிசை பரவை சோனைமுத்து வண்டியும், 3-வது பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும், 4-வது பரிசை வானக்கருப்பு செல்வந்திரன் வண்டியும் பெற்றது. 

இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 21 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஏரியூர் பெத்தாச்சி வண்டியும், 2-வது பரிசை குளக்கட்டப்பட்டி மீராராவுத்தர் வண்டியும், 3-வது பரிசை செட்டிக்குறிச்சி சுதன் வண்டியும், 4-வது பரிசை சின்ன ஊடுசேரி சந்தானி வண்டியும், 5-வது பரிசை புதுப்பட்டி மணி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.




Next Story