தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!


தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
x
தினத்தந்தி 30 April 2022 11:06 AM GMT (Updated: 2022-04-30T16:36:41+05:30)

தமிழகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

மத்திய அரசின் சமையல் வரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், மாநில அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து இருப்பதால் உடனடியாக மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக அரசு சொத்து வரி உயர்வை பலமடங்கு உயர்த்தியதால் சாதாரண நடுத்தர பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதால் உடனடியாக தமிழக அரசு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை, ராமநாதபுரம், கோவை, கரூர், ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, பாடைகட்டி இறுதிஊர்வலம் நடத்துவது போன்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.

கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகே எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அடுப்பில் மண் பானையை வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


Next Story