இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு ஆதித்யா பள்ளி மாணவர்கள் தேர்வு
இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு ஆதித்யா பள்ளி மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு ஆதித்யா பள்ளி மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
விண்வெளி விழிப்புணர்வு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி தொழில்நுட்ப அடிப்படை அறிவை வழங்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கென இளம் விஞ்ஞானி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களுக்கு இளம் வயதிலேயே விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் இளம் விஞ்ஞானி திட்டத்தில் பங்குபெற 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்கள் திபேஷ்ராஜ், சன்மதி வேல்முருகன் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சென்று பங்குபெறும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்த சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிறுவனர் ஆனந்தன் பொன்னாடை போர்த்தி பாராட்டி கவுரவித்தார். பள்ளி தாளாளர் அசோக் ஆனந்து, வித்யநாராயணா அறக்கட்டளை அறங்காவலர் அனுதா பூனமல்லி ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
15 நாள் முகாம்
இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9-ம் வகுப்பு படிக்கும் 150 மாணவர்களுக்கு 15 நாட்கள் முகாம் அமைத்து விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் கணித ஆய்வுகள் மற்றும் தொழில்சார்ந்த விண்வெளி ஆராய்ச்சி பயிற்சிகளை அளிக்கப்படும். இத்திட்டத்தில் தேர்வாகியுள்ள மாணவர்கள் 8-ம் வகுப்பில் அதிக சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதுடன் இணைய வழியில் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் ஆவர்.
மேலும் இவர்கள் ஒலிம்பியார்டு தேர்வு, அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற சான்றிதழ்களும் பெற்றுள்ளனர்.
விக்ரம் சாராபாய்
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பல குழுக்களாக பிரிக்கப்பட்டு மே 15 முதல் 30 வரை திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம், அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையம், ஐதராபாத் தேசிய தொலை உணர்வு மையம், ஷில்லாங் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
Related Tags :
Next Story