திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தலைமை செயலாளர் தரிசனம்


திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தலைமை செயலாளர் தரிசனம்
x
தினத்தந்தி 30 April 2022 9:17 PM IST (Updated: 30 April 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தலைமை செயலாளர் தரிசனம் செய்தனா்.

புதுச்சேரி மாநில தலைமை செயலராக பதவியேற்ற ராஜீவ் வர்மா இன்று காரைக்கால் வந்தார். அவருடன் முன்னாள் தலைமை செயலர் அஸ்வனிகுமாரும் வந்தார். இருவரையும் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வல்லவன் வரவேற்றார்.பின்னர் இன்று மாலை தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, மற்றும் அஸ்வனிகுமார் இருவரும் சாமி தரிசனம் செய்ய திருநள்ளாறு சென்றனர். 
முக்கிய தீர்த்தங்களை பார்வையிட்ட அவர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தரிசனம் செய்தனர். அங்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வல்லவன், துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், கோயில் நிர்வாக அதிகாரி  அருணகிரிநாதன் ஆகியோர் வரவேற்றனர். 
சனி பகவான் சன்னதியில் சாமி தரிசனத்துக்குப் பின் பரிகாரங்களை செய்த தலைமை செயலருக்கு கோவிலில் மரியாதை செய்யப்பட்டது.


Next Story