மழலையர் மாணவர்களுக்கு பட்டமளிப்பு
பாரத் வித்யாஷ்ரமம் பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
புதுவை அகரம் ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரமம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட விஷன் ஸ்கில் பள்ளி உரிமையாளரும், மாணவர்கள் ஊக்குவிப்பு பேச்சாளருமான புகழேந்தி, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் முறைகள், பாதுகாக்கும் முறைகள், நடந்துகொள்ளும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார். மழலை பருவம் ஒரு மனிதனின் பருவத்தில் முக்கிய பருவம். அதன் முதல் படியில்தான் அவர்களின் வளர்ச்சியும், அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல ஏதுவாக இருக்கும்.
மாணவர்களை மாணவர்களாக வாழ விடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story