சென்னையில் குடிபோதையில் நண்பர்கள் மோதல்; 2 பேர் கொலை
சென்னை திருவான்மியூரில் குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை,
சென்னை திருவான்மியூர் பகுதியில் குடிபோதையில் நண்பர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதில் வாக்குவாதம் முற்றியதில் 2 பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் நண்பர்களான சதீஷ்குமார் மற்றும் அருண் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரையும் கொலை செய்த பின்னர் தினேஷ் காவல் நிலையத்தில் சரண் அடைந்து உள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story