தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை...!


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை...!
x
தினத்தந்தி 1 May 2022 12:12 PM IST (Updated: 1 May 2022 12:12 PM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனையாகியுள்ளது.

சென்னை,

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாளை( அதாவது இன்று) விடுமுறை என்பதால் நேற்று மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் அதிக அளவில் வந்தனர். 

மதுபான கடைகளில் இருந்து மதுப்பிரியர்கள் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் தாங்கள் எடுத்து வந்த பைகளில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நேரம் செல்ல செல்ல மதுக்கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்த மது பிரியர்கள் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பைகளில் எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனையாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சென்னை மண்டலத்தில் ரூ. 52.28 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story