நிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..!


நிலக்கரி தட்டுப்பாடு: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்..!
x
தினத்தந்தி 1 May 2022 12:46 PM IST (Updated: 1 May 2022 12:46 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் கொண்ட பழைய அனல் மின் நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக 3 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மூன்று அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதால், மின் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து வர வேண்டிய சுமார் 12,000 டன் நிலக்கரி வரவில்லை என அனல்மின் நிலைய தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story