கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு


கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2022 8:36 PM IST (Updated: 1 May 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய சாலைக்கு முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற நெடுஞ்சாலை துறையின் 75வது ஆண்டு பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை இனி முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என்று அழைக்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story