அரசு பஸ்களில் பள்ளி மாணவர்களின் சாகச பயணம்; மன உளைச்சலில் போக்குவரத்து ஊழியர்கள்


அரசு பஸ்களில் பள்ளி மாணவர்களின் சாகச பயணம்; மன உளைச்சலில் போக்குவரத்து ஊழியர்கள்
x
தினத்தந்தி 1 May 2022 9:48 PM IST (Updated: 1 May 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களில் பள்ளி மாணவர்களின் சாகச பயணம் அதிக மன உளைச்சலை அளிப்பதாக போக்குவரத்து ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காஞ்சீபுரம்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதன்பிறகு கடந்த ஆண்டு மத்தியில் படிப்படியாக பரவல் குறைந்த காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வதும் மற்றும் பொது வெளிகளில் சண்டையிட்டு கொள்வதும் என ஒழுங்கீனமாக நடந்து கொள்வது வீடியோ வெளியாகி ஆசிரியர் மட்டுமல்லாது கல்வி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காஞ்சீபுரம் உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசுப் பேருந்தில் அதிக அளவில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தும், மேல் கூரையின் கூரையின் விளிம்புகளை பிடித்துக்கொண்டு நெடுநேரம் பயணம் செய்வது என பல சாகசங்களை நிகழ்த்தியது பயணிகளிடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போக்குவரத்து ஊழியர் ஒருவர் கூறுகையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பள்ளி மாணவர்களின் நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும் என உள்ள நிலையில் பேருந்தின் உள்ளே வர மாணவர்கள் மறுத்து ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதும் சாகசம் என்ற பெயரில் உயிரை பணயம் வைத்து தொங்கி செல்வது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.


Next Story