புஸ்சி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்


புஸ்சி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 1 May 2022 11:09 PM IST (Updated: 1 May 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

புஸ்சி வீதியில் ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புஸ்சி வீதியில் ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா தலமாக புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமித்து அதிகரித்துள்ளது. நடைமேடைகள், சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைப்பது, வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத பிரச்சினையாக இருந்து. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக புஸ்சி வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வீதியின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி சமீப காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன.
ஆக்கிரமிப்பு கடைகள்
பிளாட்பாரத்தை தாண்டி சாலையிலேயே பல அடி தூரத்தை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளை நிறுத்தி வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இந்த வழியில் தான் கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். ஆனால் அவற்றை முறைப்படுத்த யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலையின் இருபுறமும் இதுபோல் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதால் 2 சக்கர வாகனங்களை கூட நிறுத்த வழியில்லாமல் உள்ளது. அதுமட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பார்க்கிங் வசதியின்றி கட்டப்பட்டுள்ளதால் அங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலைகளிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Next Story