தாய்-மகனை தாக்கி கொலைமிரட்டல்
தாய்-மகனை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் பிரேமலட்சுமி (வயது 41). இவருக்கு ஸ்ரீதர் (21) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் ஸ்ரீதருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜித், அரவிந்த், மாலினி, உண்ணாமலை உள்பட சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு அஜித், அரவிந்த், மாலினி, உண்ணாமலை ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் பிரேமலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து ஸ்ரீதரை தாக்கியதாக தெரிகிறது. தடுக்க முயன்ற பிரேம லட்சுமியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் அஜித், அரவிந்த், மாலினி, உண்ணாமலை உள்பட 10 பேர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story