24 மணி நேரமும் ஓயாமல் உழைக்கும் முதல்-அமைச்சரை தமிழகம் பெற்றிருக்கிறது அமைச்சர் புகழாரம்


24 மணி நேரமும் ஓயாமல் உழைக்கும் முதல்-அமைச்சரை தமிழகம் பெற்றிருக்கிறது அமைச்சர் புகழாரம்
x
தினத்தந்தி 2 May 2022 1:51 AM IST (Updated: 2 May 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

24 மணி நேரமும் ஓயாமல் உழைக்கும் முதல்-அமைச்சரை தமிழகம் பெற்றிருக்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடந்த நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தமிழ்நாடு அரசின் பெருமைக்குரிய துறைகளில் ஒன்றாக நெடுஞ்சாலைத்துறை இருக்கிறது. முதல்-அமைச்சர் நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாவில் கலந்துகொண்டதன் மூலம் இந்த விழா மேலும் பளபளக்கிறது.

கண் போல பார்க்கும் முதல்-அமைச்சர்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை மேலும் வலு சேர்க்கிறது. அதனால்தான் இந்த துறையின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு திட்டங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் நிதியை வழங்கியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அவருடைய மனதில் உதிக்கும் எண்ணங்கள் எல்லாம் இன்று திட்டங்களாக வந்து கொண்டிருக்கின்றன. முதல்-அமைச்சர் நெடுஞ்சாலைத்துறையை ஒரு கண்ணாக பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவே அதை சிறப்பாக கொண்டுசெல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

24 மணி நேரமும் ஓயாமல் உழைக்கிறார்

முதல்-அமைச்சர் மாநில முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். கடந்த ஓராண்டில் அவருடைய செயல்பாடுகளின் மூலம் இந்தியாவில் இருக்கும் முதல்-அமைச்சர்களுக்கெல்லாம் முதல்-அமைச்சராக இருக்கிறார். 24 மணி நேரமும் ஓயாமல் உழைக்கும் முதல்-அமைச்சரை தமிழகம் பெற்றிருக்கிறது. அவருடைய ஆட்சிக்கு இந்த நெடுஞ்சாலைத்துறை மூலம் எவ்வளவு சிறப்பு சேர்க்க முடியுமோ அதற்கேற்றார்போல் நாங்கள் உழைக்க காத்திருக்கிறோம்.

சாலைகளுக்கு திராவிட நிறம்

குறுக்குவழிகள் பிடிப்பதில்லை சாலைகளுக்கு. நெடுஞ்சாலைகள் என்பது எப்போதும் நேர்வழியில்தான் செல்லும். தேசமெங்கும் உள்ள சாலைகளுக்கு பிடித்த நிறமே திராவிட நிறம்தான். அதனால்தான் அவை கருப்பாக இருக்கின்றன. மனிதர்கள் ஒப்பனை செய்து கொள்வது அடுத்தவர்களை கவர்வதற்காக. ஆனால் சாலைகள் ஒப்பனை செய்துகொள்வது அடுத்தவர்களை காப்பாற்றுவதற்காக. 10 மாதம் தாய் சுமந்தது நம்மைத்தான்; ஆனால் மற்ற மாதங்கள் மண் சுமக்கிறது நம்மைத்தான். நியாயப்படி நெடுநாள் நம்மைச் சுமப்பது இந்த நெடுஞ்சாலைதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story