கடலூரில் ஏப்ரலில் பொது இடங்களில் மது அருந்திய 5,347 பேர் மீது வழக்கு


கடலூரில் ஏப்ரலில் பொது இடங்களில் மது அருந்திய 5,347 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 May 2022 9:58 AM IST (Updated: 2 May 2022 9:58 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பொது இடங்களில் மது அருந்தியதாக 5,347 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.




கடலூர்,



கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களால் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது என குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.  இதுதவிர, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையும் உருவானது.

இதனை கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அது குறித்து உடனடியாக போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கடந்த மாத இறுதியில் கூறினார்.

இந்நிலையில், கடலூரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பொது இடங்களில் மது அருந்தியதாக 5,347 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, பொது இடங்களில் மது அருந்துபவர்கள் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க புதிய காவல் உதவி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, பொதுமக்கள் 04142-284333, 284353 என்ற எண்களை தொடர்பு கொண்டு இடையூறு ஏற்படுத்தும் குடிபோதை ஆசாமிகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என்று காவல் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  இதனால், குற்ற மற்றும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை உள்ளிட்ட குடும்ப வழக்குகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story