பஸ் நிலையத்தில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் பண்டல்கள் திருட்டு...!
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் பண்டல்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து உள்ளனர்.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கோவை செல்வதற்காக புறப்பட்ட அரசு பஸ்சில் சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட் பண்டல்கள், ஏடிஎம் கார்டு, ஐ.டி கார்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து பெரியகுளம் வடுகபட்டியைச் சேர்ந்த கண்டக்டர் செந்தில் முருகன் (வயது 43) திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் நகர் வடக்கு போலீசார் டிக்கெட் பண்டல்களை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களை தவிர்க்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story