மாணவர்கள் நலன் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகள்


மாணவர்கள் நலன் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புகள்
x
தினத்தந்தி 2 May 2022 4:01 PM IST (Updated: 2 May 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் நலனுக்காக முன்னெடுப்புகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* மாணவர்கள் நலனுக்காக வரும் கல்வியாண்டில் மாதந்தோறும் பெற்றோர்-மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும். 

* இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள் பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்படும்.

* கலை, விளையாட்டுத் திறன், மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்

* மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரையின் பேரில் மனநல ஆலோசனை வழங்கப்படும்.

* இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் கலைகள், ஓவியம், கூத்து, புகைப்படக் கலை, நடனம் உள்ளிட்டவைகள் நடத்தப்படும். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story