கூட்டணியில் இருந்தாலும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம் அன்பழகன் பேச்சு
புதுவையில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்தாலும் தவறுகளை சுட்டிக்காட்டுவோம் என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி
புதுவையில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்தாலும் தவறுகளை சுட்டிக்காட்டுவோம் என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
பொதுக்கூட்டம்
புதுச்சேரி கிழக்கு மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின பொதுக்கூட்டம் லாஸ்பேட்டை உழவர்சந்தையில் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், பேரவை தலைவர் பரசுராமன், துணைத் தலைவர்கள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக முன்னாள் எம்.பி. தாமோதரன், கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், தலைமை கழக பேச்சாளர்கள் காவேரி, மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தவறுகளை சுட்டிக்காட்டுவோம்
புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
தொழிலாளர்களின் உரிமையை பெற்ற நாள் மே தினமாகும். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தொழிலாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தொடர்ந்து ஆட்சியில் இருந்தார்கள். தொழிலாளர்கள் நலனில் அக்கறை இல்லை என்றால் எந்த அரசாக இருந்தாலும் நீடிக்காது. புதுச்சேரியில் எங்கள் கூட்டணி அரசு செயல்பட்டாலும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவோம். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரும் போது புதுச்சேரியிலும் ஆட்சி மலர இந்த மே தினத்தில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில இணை செயலாளர் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு, துணை செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி, உமா, பொருளாளர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், நகர செயலாளர்கள் அன்பழக உடையார், சித்தானந்தம், மற்றும் நிர்வாகிகள் வி.கே.மூர்த்தி கிருஷ்ணமூர்த்தி, காந்தி, குமுதன், ஜெயசேரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார். முன்னதாக ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story