கண்ணாடியால் உடலை கிழித்து நடுரோட்டில் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
வில்லியனூர் அருகே நடுரோட்டில் கண்ணாடி பாட்டிலால் உடலை கிழித்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் மீட்டு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே நடுரோட்டில் கண்ணாடி பாட்டிலால் உடலை கிழித்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் மீட்டு கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ரத்தம் சொட்ட சொட்ட...
வில்லியனூர் அருகே ஏம்பலத்தில் நான்குரோடு சந்திப்பு உள்ளது. இங்கு நேற்று வாலிபர் ஒருவர் மேல்சட்டை இன்றி கால்சட்டை மற்றும் அணிந்த நிலையில், உடைந்த கண்ணாடி பாட்டியால் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட சுற்றித்திரிந்தார். இவரின் அருகில் சென்ற பொதுமக்களை அவர் அச்சுறுத்தும் வகையில் கண்ணாடி பாட்டிலை காட்டி மிரட்டினார்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை சுற்றிவளைத்து, அவர் கையில் வைத்திருந்த கண்ணாடி பாட்டிலை பிடுங்கி வீசினர். உடனே அவரை கரிக்கலாம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தற்கொலை மிரட்டல்
விசாரணையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர், ஏம்பலம் புதுநகரை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் சில தினங்களுக்கு முன்பு ஏம்பலம் நான்குரோடு சந்திப்பில் இரவு 10 மணி அளவில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும், இதுபோல் அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுத்து பொதுமக்களை அச்சுறுத்தியது தெரியவந்தது.
அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால் தேவநாதனுக்கு மனநல பரிசோதனை செய்ய சென்னை கீழ்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி பாட்டிலை உடைத்து உடலை கிழித்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் ஏம்பலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story