சிறுவனிடம் பாலியல் சீண்டல் ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுவனிடம் பாலியல் சீண்டல் ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 2 May 2022 8:54 PM IST (Updated: 2 May 2022 8:54 PM IST)
t-max-icont-min-icon

சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி
சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் சீண்டல்

புதுச்சேரி கோவிந்தசாலை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 30-ந் தேதி இரவு காமராஜர் சாலையில் ஆட்டோவில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 12 வயது சிறுவனிடம் அவர் நைசாக பேசியுள்ளார்.
பின்னர் அந்த சிறுவனை ஆட்டோவில் மறைவான இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், ஸ்டீபனிடம் இருந்து தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் கூறினான். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போக்சோவில் கைது

இதுபற்றி புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணைக்கு பின், பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஸ்டீபனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story