தர்மபுரியில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது சூறைக்காற்று, இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது.
தர்மபுரி,
தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதேவேளை, தமிழக பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் இன்று இரவு 7 மணி முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் போது தர்மபுரி- மொரப்பூர் சாலையில் நடுப்பட்டி பகுதியில் புளிய மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல், சூறைக்காற்று வீசி வருவதால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கபப்ட்டுள்ளது. இதனால், மக்கள் அவதியடைந்துள்ளனர். அதேவேளை, மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story