முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன், போனிகபூர் சந்திப்பு


முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன், போனிகபூர் சந்திப்பு
x
தினத்தந்தி 2 May 2022 10:10 PM IST (Updated: 2 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் ரங்கசாமியை பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் இன்று புதுச்சேரி வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது துணை சபாநாயகர் ராஜவேலு உடனிருந்தார். அவர் புதுச்சேரியில் படப்பிடிப்பினை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போனிகபூர் நிருபர்களிடம் கூறும்போது, மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சரை சந்தித்தேன். புதுச்சேரி அருமையான இடம். பல்வேறு கலாசாரங்கள் நிறைந்தது. சுற்றுலா பயணிகளை ஈர்க்க கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை இன்னும் அழகுபடுத்த வேண்டும் என்றார்.

Next Story