கருணாநிதி, விவேக் பெயரில் சாலைகள்: அடைமொழிகள் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது


கருணாநிதி, விவேக் பெயரில் சாலைகள்: அடைமொழிகள் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது
x
தினத்தந்தி 3 May 2022 12:28 AM IST (Updated: 3 May 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி, விவேக் பெயரில் சாலைகள்: அடைமொழிகள் தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது தமிழக அரசுக்கு கி.வீரமணி யோசனை.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் வெள்ளை கோட்டு அணியும் நிகழ்வில் இப்போகிரெடிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை ரீதியாக விசாரணை நடத்தவும், மதுரை மருத்துவக்கல்லூரி டீனை பணியிலிருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் வைத்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உடனடி நடவடிக்கை பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கி.வீரமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்றும், பத்மாவதிநகரில் உள்ள தெருவுக்கு சின்னக் கலைவாணர் விவேக் தெரு என்றும் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும், தெருக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பெயர் சூட்டும்போது, கூடுமானவரை அப்பெயர் ஓரிரு சொற்களில் அமைந்தால், அப்பெயர் நடைமுறையில் பலகாலம் புழக்கத்தில் இருந்து பெயர் வைக்கப்படுபவர்களுக்கு பெருமை சேர்க்கும். எனவே அடைமொழிகளை தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story