சென்னை வட்ட பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பொறுப்பேற்பு
பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளராக பணியாற்றி வந்த வி.கே.சஞ்சீவி பணி ஓய்வுபெற்றதை தொடர்ந்து டி.பூங்கொடி சென்னை வட்ட பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை,
சென்னை வட்ட பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளராக பணியாற்றி வந்த வி.கே.சஞ்சீவி பணி ஓய்வுபெற்றதை தொடர்ந்து டி.பூங்கொடி சென்னை வட்ட பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கோயம்புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தொடர்பு பொறியியல் துறையில் பட்டம் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. தொழில்நுட்ப மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர். 1987-ம் ஆண்டு தொலைபேசி துறையில் பணியில் சேர்ந்தார்.
இதற்கு முன்பு தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டத்தில் முதன்மை பொது மேலாளராக பணியாற்றினார். தனது 35 வருட சேவையில் தமிழ்நாடு, ஐதராபாத், ஷில்லாங், கவுகாத்தி ஆகிய இடங்களில் பல்வேறு துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் ஏற்கனவே சென்னை வட்டத்தில் சுமார் 12 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு திறம்பட சேவை புரியவும் அனுபவம் பெற்றவர். சென்னை வட்டமானது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் வரம்பைக் கொண்டுள்ளது.
மேற்கண்ட தகவல்கள் பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story