வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ நாளை தொடங்குகிறது
அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை இருக்கிறது. இந்த நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
சென்னை,
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே, ‘அக்னி நட்சத்திரம்’ என்னும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான், ‘அக்னி நட்சத்திரம்’. ஜோதிடப்படி, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் பயணிப்பார். அந்த வகையில், சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது உச்ச பலம் பெறுவதால், அதிக வெப்பம் காணப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 14-ந் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறுகிறார்கள்.
இந்த காலம் வடகிழக்கு பருவமழை காலத்திற்கும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். பஞ்சாங்கத்தின் படி, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கத்தைவிட இந்த நாட்களில், சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். இந்த காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைப்பார்கள்.
வெயில் கொளுத்தும்
அந்த வகையில், நாளை (புதன்கிழமை) ‘அக்னி நட்சத்திரம்’ என்ற கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த (ஏப்ரல்) மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.
பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியையும் தாண்டியது. இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசியதுடன், இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படுகிறது.
தர்பூசணி, இளநீர், நுங்கு
இதுகுறித்து வானிலை நிபுணர்கள் கூறும்போது, ‘கத்திரி வெயில் நாளை தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, முதல் 7 நாட்களில் மெதுவாக வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த 7 தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி 7 தினங்களில் படிப்படியாக குறையும் என்பதை நாம் அனுபவித்து உணரலாம்’ என்கின்றனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘கத்திரி வெயில் காலத்தில், பகல் 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேவை இல்லாமல் குழந்தைகள் மற்றும் பொதுமக்களும் வெளியே செல்வதை தவிர்த்து, வீட்டிலேயே இருப்பது நல்லது. கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வதற்கு, அதிக காரம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதுடன், தர்பூசணி போன்ற நீர்சத்து நிறைந்த பழங்களான நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய், மோர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது’ என்கின்றனர்.

Related Tags :
Next Story