ரம்ஜான் பண்டிகை: கமல்ஹாசன் வாழ்த்து


ரம்ஜான் பண்டிகை: கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 3 May 2022 9:54 AM IST (Updated: 3 May 2022 9:54 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என்  வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story