பிளஸ்-1 மாணவனை தாக்கிய சக மாணவர்கள் - அடுத்த அதிர்ச்சி சம்பவம்


பிளஸ்-1 மாணவனை தாக்கிய சக மாணவர்கள் - அடுத்த அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 3 May 2022 12:56 PM IST (Updated: 3 May 2022 12:56 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருபவர் முகமது உமர். இவரை அவரது வகுப்பில் படித்து வரும் சக மாணவர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது ஆசிரியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  

இதனையடுத்து அந்த மாணவனின் பெற்றோர் தனது மகனை தாக்கிய மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பந்தபட்ட மாணவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story