பா ஜ க தலைவர் சாமிநாதன் மனைவியிடம் 85 பவுன் நகைகள் மோசடி பெண் மீது வழக்கு


பா ஜ க  தலைவர் சாமிநாதன் மனைவியிடம் 85 பவுன் நகைகள் மோசடி பெண் மீது வழக்கு
x

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மனைவியிடம் 85 பவுன் நகைகளை மோசடி செய்ததாக பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மனைவியிடம் 85 பவுன் நகைகளை மோசடி செய்ததாக பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாமிநாதன் மனைவி

புதுவை மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவரது தோழி வாணரப்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரி (வயது 50). இருவரும் படிக்கும் காலத்திலிருந்தே தோழிகளாக பழகி வந்தனர். இந்த பழக்கம் தற்போதும் நீடித்து வருகிறது.
விஜயகுமாரி தனது குழந்தைகளின் படிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி சாமிநாதன் மனைவி விஜயலட்சுமியிடம் கடந்த 2018-ம் ஆண்டு பணம் வாங்கியுள்ளார். அதை சில சமயங்களில் திருப்பியும் கொடுத்துள்ளார்.

85 பவுன் நகைகள்

விஜயலட்சுமி பணம் இல்லாத நேரங்களில் தனது தோழிக்கு உதவிடும் எண்ணத்தில் நகையை கொடுத்துள்ளார். அதை விஜயகுமாரி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் வாங்கி செலவழித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக அவர் 85 பவுன் நகைகளை பெற்று அடகு வைத்து செலவழித்துள்ளதாகவும் அந்த நகைகளை விஜயலட்சுமி திருப்பி கேட்டபோது அதை கொடுக்கவும் இல்லை என்றும் தெரிகிறது.
இந்தநிலையில் விஜயலட்சுமி தனது பிள்ளைகளுக்கு திருமணம் உள்ளிட்ட காரியங்களுக்காக நகைகள் தேவை என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு விஜயகுமாரி முறையாக பதில் அளிக்கவில்லை. கடந்த சில நாட்களாக அவரை தொடர்புகொள்ளவும் முடியாமல் இருந்தது.
இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் விஜயகுமாரி மற்றும் அவரது உறவினர்கள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story