தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
பஸ் நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரத்தில் தனியார் பஸ் கண்ணாடி உடைத்தவரைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக மடுகரைக்கு நேற்று இரவு ஒரு தனியார் பஸ் சென்றது. கரிக்கலாம்பாக்கம் நான்கு ரோடு சந்திப்பு அருகே வந்தபோது பஸ்சை மறித்த வாலிபர்கள் அபிஷேகப்பாக்கத்தில் பஸ்சை நிறுத்தாதது ஏன்? என்று கேட்டு டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்தனர். மேலும் அப்போது கல்வீசி பஸ்சின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியதுடன் டிரைவர், கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்தனர். இதில், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த விஜய், சிங்கிரிகோவில் பகுதியை சேர்ந்த ராகுல் ஆகியோர் தான் பஸ் கண்ணாடியை உடைத்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story