வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை தாக்கிய வெள்ளைப்புலி


வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை தாக்கிய வெள்ளைப்புலி
x
தினத்தந்தி 4 May 2022 2:50 AM IST (Updated: 4 May 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி தாக்கியதில் ஊழியர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னை,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமாக சுற்றுலா பயணிகள் வருகை தந்து பூங்காவை கண்டு களிப்பர்.

தற்போது கோடை காலம் என்பதால் விலங்குகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பூங்கா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது.இந்த பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூங்காவில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த நகுலன் என்ற வெள்ளைப்புலிக்கு பூங்கா டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஆக்ரோஷம் அடைந்த வெள்ளைப்புலி விலங்கு காப்பாளரும், பூங்கா ஊழியருமான செல்லையாவை தாக்கியது. இதில் அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து காயமடைந்த செல்லையாவை சக ஊழியர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story