வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், கர்ப்பிணி மகள் பலி
தூத்துக்குடியில் நேற்று அதிகாலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாயும் அவரது கர்ப்பிணிமகளும் பலியானார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமன் என்ற முத்தையா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார வளாகத்தில் டோக்கன் கொடுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 45). இவர்களது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா (21).
இவருக்கும், மார்த்தாண்டம்பட்டியை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த கார்த்திகாவுக்கு கடந்த 29-ந் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.
மேற்கூரை இடிந்தது
இவர்கள் வீட்டின் மேற்கூரையானது, பனங்கட்டை கொண்டு மேல் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்பகுதியில் பிளைவுட் கொண்டு மேற்பகுதி மூடப்பட்டு இருந்தது. இதனால் மேற்கூரை சேதம் அடைந்து அவ்வப்போது லேசாக உடைந்து விழுந்தபோதும், அதனை கவனிக்காமல் எலி ஓடுவதாகவே நினைத்து உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை மொத்தமாக இடிந்து வீட்டின் உள்பகுதியில் விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த முத்துராமன், காளியம்மாள், கார்த்திகா ஆகிய 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதில் காளியம்மாள், கார்த்திகா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முத்துராமன் படுகாயம் அடைந்தார்.
அமைச்சர் ஆறுதல்
இந்த துயர சம்பவம் பற்றி கேள்விபட்டதும் அமைச்சர் கீதாஜீவன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முத்துராமனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரிடம் தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story