சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி
சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் (வயது 57) என்பவருக்கு சொந்தமான எஸ். பி.டி. பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலை டி.ஆர்.ஓ உரிமம் பெற்று 5 அறைகளில் 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சிறியரக பட்டாசு வெடிகள் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணி செய்ய வந்த விக்னேஸ்வரன் என்பவர் ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பில் மேற்கொள்ளும் போது உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமாகி இடிபாடுகளில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவத்தில் உயிரிழந்த சோலை விக்னேஸ்வரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று தேடிவருகின்றனர். வெடி விபத்து குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Related Tags :
Next Story