"நீட் மசோதா - உள்துறைக்கு அனுப்பி வைப்பு"; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியுள்ளதாக, அவரின் தனி செயலாளர் தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி இருந்தார். . இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி, கவர்னரை நேரில் சந்தித்து முதல் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த மசோதா தொடர்பாக, ஜனாதிபதியிடமும், மத்திய அரசிடமும் எம்.பி.,க்கள் குழுவினர் மனு அளித்திருந்தனர்.
Related Tags :
Next Story