வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் ஜிப்மர் இயக்குனர் வேண்டுகோள்
ஜிப்மரில் வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி
ஜிப்மரில் வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மோசடி வேலை
ஜிப்மர் நிறுவனத்தில் வேலைபெற்று தருவதாக வாக்குறுதி அளித்து பலர் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏமாற்றப்பட்டதாகவும், போலியான பணி நியமன உத்தரவுகளை அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிப்மர் நிறுவனமோ அதன் ஊழியர்களோ இந்த சம்பவத்தில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படவில்லை.
இதுபோன்ற செயல்கள் ஜிப்மரில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றும் மோசடி வேலையாகும். ஜிப்மரில் அனைத்து விதமான பணிகளும் நேர்மையான முறையில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் அரசு சட்ட திட்டங்களின் அடிப்படையில் நடைபெறுகிறது.
ஜிப்மரின் அனைத்து பணிநியமன விளம்பரங்களும் செய்தித்தாள்களிலும், நிறுவன வலைதளத்திலும் பணிக்கான முழு விவரங்களும் வெளியிடப்படும்.
ஏமாறவேண்டாம்
நிறுவனத்தில் உள்ள பி மற்றும் சி-பிரிவு பணி களுக்கு எழுத்து தேர்வும் ஏ-பிரிவு பணிகளுக்கு பணியின் தேவைக்கேற்ப எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் அல்லது எழுத்து தேர்வுடன் கூடிய நேர்காணல் தேர்வும் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த பணி நியமனங்களில் எந்த ஒரு வெளிநபரோ அல்லது நிறுவனமோ ஈடுபட அனுமதியில்லை. எனவே பொதுமக்கள் எந்த நபரையோ, அமைப்பு களையோ நம்பி பணம் கொடுத்து மோசமடைய வேண்டாம். மேலும் ஜிப்மர் நிறுவனம் இதுபோன்ற சட்ட விரோத செயல்களுக்கு எப்போதும் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story