திருக்காஞ்சி கோவிலில் காசி விஸ்வநாதருக்கு புதிய சன்னதி அமைச்சர் நமச்சிவாயம் அடிக்கல் நாட்டினார்
திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் புதிதாக காசி விஸ்வநாதர் சன்னதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை அமைச்சர் நமச்சிவாயம் நாட்டினார்.
புதுச்சேரி
திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் புதிதாக காசி விஸ்வநாதர் சன்னதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை அமைச்சர் நமச்சிவாயம் நாட்டினார்.
புஷ்கரணி
திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. சங்கராபரணி ஆற்றின் கரையில் உள்ள இங்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் புஷ்கரணி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு 64 அடி உயர சிவன் சிலையும் நிறுவப்பட உள்ளது.
இந்தநிலையில் கோவில் வளாகத்தில் காசி விஸ்வநாதருக்கு புதிதாக தனி சன்னதி அமைக்கப்பட உள்ளது.
காசியில் இருந்து லிங்கம்
இந்த சன்னதி கட்டுமான பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த சன்னதியில் லிங்கம் அமைக்கப்படுகிறது. அந்த லிங்கத்தை காசியிலிருந்து கொண்டு வந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவில்களில் உள்ள சாமி சிலைகளுக்கு வழக்கமாக கோவில் பூசாரிகள் அபிசேகம் செய்து பூஜை செய்வது வழக்கம். ஆனால் புதியதாக அமைய உள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் நிறுவப்படும் லிங்கத்துக்கு பொதுமக்களே அபிசேகம் செய்யலாம்.
சங்கராபரணி நீர்
அதாவது அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பொதுமக்களே லிங்கத்தின் மீது ஊற்றி அபிசேகம் செய்து வணங்கலாம். கோவில் திறந்திருக்கும்போது முழுநேரமும் அபிசேகம் செய்து வழிபட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
----
Related Tags :
Next Story