சங்கராபுரம் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்
சங்கராபுரம் அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள வடசெட்டியந்தல் கிராம எல்லைப்பகுதியான வடசேமபாளையம் முருகன் கோவில் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட செட்டியந்தல் கிராம நிர்வாக அலுவலர் உஷா, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இருப்பினும் அவா் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. தொடர்ந்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story