முதல் நாளில் 17 இடங்களில் வெயில் சதம் அடித்தது: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 17 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இனி வரக்கூடிய நாட்களில் இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரையிலான இடைபட்ட 25 நாட்கள் நீடிக்கும். அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் இந்த வார்த்தையை வானிலை ஆய்வு மையம் ஏற்பதும் இல்லை. அதுபற்றி எந்த தகவலையும் வெளியிடுவதும் கிடையாது. ஆனால் ஜோதிடம் மற்றும் பஞ்சாங்க கணக்கின்படி இந்த அக்னி நட்சத்திர காலம் கணக்கிடப்படுகிறது.
இதில் பஞ்சாங்க கணக்கின்படி, கிருத்திகை நட்சத்திரத்தை நோக்கி சூரியன் பயணிக்கும் காலத்தைதான் அக்னி நட்சத்திர காலம் என்று கூறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். வழக்கமான கோடை காலத்தில் வெயிலின் கொடுமை அதிகரித்து காணப்படும் நிலையில், இந்த கத்தரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும்.
15 இடங்களில் வெயில் சதம்
அந்தவகையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நேற்று தொடங்கி இருக்கிறது. கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தனது கோரமுகத்தை காட்டியது. வழக்கமாக கத்தரி வெயில் காலம் தொடங்கிய பிறகுதான், வெயிலின் அளவு 110 டிகிரியை தொடும். ஆனால் அதற்கு முன்பாகவே கடந்த வாரத்தில் காஞ்சீபுரத்தில் 110 டிகிரியை தாண்டி வெயில் பாதிவானதை பார்க்க முடிந்தது.
இந்தநிலையில் வாட்டி வதைக்கும் இந்த கத்தரி வெயில் காலத்தின் முதல் நாளான நேற்று தமிழகத்தில் 17 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது இந்திய மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக காஞ்சீபுரத்தில் 107.6 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. பல இடங்களில் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்ததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். உடல் வெப்பத்தை தணிக்க குளிர்பானங்கள் மற்றும் குளிர்ச்சியான உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டனர்.
நேற்று பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தாலும், வளிமண்டலத்தில் நிலவிய கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்ததால், அந்த இடங்களிலும், அதனையொட்டிய ஓரிரு இடங்களிலும் வெப்பம் சற்று குறைந்து இருந்தது.
3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்
இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்த கணிப்பின்படி, கோடைகாலமாக இருக்கும் தற்போதைய நேரத்தில் தமிழகத்தில் இயல்பை விட 2 டிகிரி வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தே இருக்கும் என்பது தெரியவருகிறது.
17 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
தமிழகத்தில் நேற்று முக்கியமான இடங்களில் பதிவான வெயில் அளவுகள் வருமாறு:-
அரியலூர் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)
சென்னை நுங்கம்பாக்கம் - 96.44 டிகிரி (35.8 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 98.24 டிகிரி (36.8)
கோவை - 95.9 டிகிரி (35.5 செல்சியஸ்)
கடலூர் - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்)
தர்மபுரி - 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)
ஈரோடு - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
கன்னியாகுமரி - 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)
கரூர் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
காஞ்சீபுரம் - 107.6 டிகிரி (42 செல்சியஸ்)
கிருஷ்ணகிரி - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)
மதுரை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
புதுக்கோட்டை - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)
ராணிப்பேட்டை - 105.08 டிகிரி (40.6 செல்சியஸ்)
சேலம் - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)
தூத்துக்குடி - 95.9 டிகிரி (35.5 செல்சியஸ்)
திருச்சி - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)
திருவள்ளூர் - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)
திருவண்ணாமலை - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)
வேலூர் - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)
திருத்தணி - 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்)
விருதுநகர் - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்)

Related Tags :
Next Story