தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்த கானா பாடகர் ரெயில் மோதி பலி
தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்த கானா பாடகர் ரெயில் மோதி பலி.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் வசந்தகுமார் (வயது 22). இவர் கானா பாடல்களை தானே எழுதி செல்போனில் படக்காட்சி மூலம் படமெடுத்து யூடியூபில் பரப்பி வந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மேல்ஆலத்தூர் ரெயில் நிலையம் அருகில் தனது நண்பர்களுடன் கானா பாடல் ஆல்பம் எடுக்க சென்று அங்குள்ள தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ரெயில் வசந்தகுமார் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வசந்தகுமார் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தான் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story