சூறைக்காற்றுடன் கனமழை - வீடுகளின் மேற்கூரை விழுந்து 5 பேர் காயம்...!
பல்லடம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகளின் மேற்கூரை விழுந்து 5 பேர் காயம் அடைந்தனர்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதால் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சிமெண்ட் கூரை வீடுகள் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்துள்ளது. பலத்த இடி, மின்னல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்ததில் ராஜு, மகாலட்சுமி, சம்பு நாத் பாட்டி, சர்வேஷ் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இவர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story