பொதுத்தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
பொதுத்தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை, சாந்தோமில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தேர்வுகளுக்கு பள்ளி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“அனைத்து மாவட்டங்களிலும் பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.
திமுக அரசு வந்த பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்வு; தேர்வின் முடிவுகள் ஜூலைக்குள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
Related Tags :
Next Story