சேவூரில் வீசிய சூறாவளி காற்றால் 5 ஆயிரம் வாழைகள் சேதம்...!
சேவூர் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன.
சேவூர்,
திருப்பூர் மாவட்டம் சேவூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு சூறாவளி காற்று வீசியது. இதில் வேட்டுவபாளையம் ஊராட்சி, அசநல்லி பாளையம் பகுதியில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து வாழை மரம் சேதங்களை கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
இதில் ஆண்டவமூர்த்திக்கு சொந்தமான தோட்டத்தில் 1,750, தங்கவேல் தோட்டத்தில் 570, பொன்னுச்சாமி தோட்டத்தில் 500, பிரேம கலா தோட்டத்தில் 2,000, வெங்கடாசலம் தோட்டத்தில் 200 என மொத்தம் 5,020 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு மாதத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழை மரங்கள் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலை உணர்ந்து, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினர்.
Related Tags :
Next Story