பச்சிளம் பெண் குழந்தையை முள் புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்...!


பச்சிளம் பெண் குழந்தையை முள் புதரில் வீசிச்சென்ற கொடூர தாய்...!
x
தினத்தந்தி 5 May 2022 4:17 PM IST (Updated: 5 May 2022 4:17 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை முள் புதரில் வீசிச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல் கொத்த குப்பம் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் குப்பைகள் கொட்டும் இடத்தில் திடீரென இன்று காலை 6.00 மணியளவில் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த போது பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ரத்த கறையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 உடனடியாக குழந்தையை மீட்டு மேல்பட்டி போலீசார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தி பச்சிளம்பெண் குழந்தையை மீட்டு மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிச் சென்ற தாயை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story