இன்று முதல் 10 நாட்களுக்கு விசித்திரன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தங்க சங்கிலி பரிசு யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் அறிவிப்பு


இன்று முதல் 10 நாட்களுக்கு விசித்திரன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தங்க சங்கிலி பரிசு யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2022 10:50 PM IST (Updated: 5 May 2022 10:50 PM IST)
t-max-icont-min-icon

தியேட்டர்களில் இன்று வெளியாகும் ‘விசித்திரன்’ படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தங்க சங்கிலி பரிசாக வழங்கப்படும் என யுவர் பேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

புதுச்சேரி
தியேட்டர்களில் இன்று வெளியாகும் ‘விசித்திரன்’ படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தங்க சங்கிலி பரிசாக வழங்கப்படும் என யுவர் பேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

இன்று வெளியீடு

பிரபல இயக்குனர் பாலா தயாரிப்பில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘விசித்திரன்’ திரைப்படம் தமிழகம், புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. புதுச்சேரி, தென்னாற்காடு, வடஆற்காடு மாவட்டங்களில் இந்த படத்தை யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதையொட்டி ரசிகர்களுக்கு தங்க சங்கிலி பரிசு வழங்கும் திட்டத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு தெரிவித்து இருப்பதாவது:-
அதாவது, ‘விசித்திரன்’ படம் பார்ப்பதற்கு புக்மை ஷோ மூலமாக புக்கிங் செய்து அந்த டிக்கெட்டை www.yourbackers.org என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ததுடன் ஒரு லிங்க் வரும்.
அந்த லிங்கை வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இ-மெயில் ஆகிய சமூக வலைதளங்களில் பகிர வேண்டும். இப்படி அதிகபட்ச எண்ணிக்கையில் பகிரும் ரசிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க பரிசுகள் வழங்கப்படும். 

பரிசு விவரம்

இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்களுக்கு மேற்கண்டவாறு சமூகவலைதளங்களில் ‘விசித்திரன்’ படத்துக்கான டிக்கெட்டை அதிக அளவில் பதிவிடுவோருக்கு பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி முதல் பரிசு 2 பவுன் தங்க சங்கிலி, 2-ம் பரிசு ஒரு பவுன் தங்க சங்கிலி, 3-ம் பரிசு அரை பவுன் தங்க சங்கிலி வழங்கப்படும். இதுதவிர மேலும் 7 பேருக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயம் ஆறுதல் பரிசாக வழங்கப்பட உள்ளது. 
மேலும் விசித்திரன் படம் வினியோகத்தில் கிடைக்கும் மொத்த வருமானமும் ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவு, ஏழை- எளியோருக்கு உணவு வழங்குதல், பிளாஸ்டிக் மற்றும் குப்பை அகற்றுதல், இயற்கை விவசாய மேம்பாடு போன்ற சமூக பணிகளுக்காக யுவர் பேக்கர்ஸ் செலவிட உள்ளது.
இவ்வாறு யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு தெரிவித்துள்ளார். 

Next Story