வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி: மாமல்லபுரம் விற்பனை கூடத்தில் ரூ.2½ கோடி சாமி சிலைகள் மீட்பு
மாமல்லபுரத்தில் உள்ள கலைப்பொருட்கள் விற்பனை கூடத்தில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2½ கோடி மதிப்பிலான சாமி சிலைகளை போலீசார் மீட்டனர்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொன்மை வாய்ந்த கலைநயமிக்க பொருட்கள், புராதன பொருட்கள், சிற்ப சிலைகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், கடைகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள ‘தி போட்டிக்’ என்ற கலைப்பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக புராதன உலோக சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இந்த பிரிவின் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில் ஐ.ஜி. தினகரன் வழிகாட்டுதலின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ப.அசோக் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் தனிப்படை போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள்.
ரூ.2½ கோடி சிலைகள் மீட்பு
இந்த சோதனையில், உலோகத்திலான நின்ற நிலையில் பார்வதி அம்மன் சிலை, அமர்ந்த நிலையில் பார்வதி அம்மன் சிலை, நடனமாடும் சிவன் சிலை ஆகிய 3 புராதன சாமி சிலைகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள ஏதேனும் பழமையான கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே கோவிலில் சாமி சிலைகள் திருட்டு போன வழக்குகளை ஆராய்ந்து வருகின்றனர்.
தற்போது மீட்கப்பட்டுள்ள இந்த சாமி சிலைகளின் மதிப்பு ரூ.2½ கோடிக்கு மேல் இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சிலைகள் கடத்தல் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். எனவே இந்த வழக்கில் தற்போது சிக்கியவர்களின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
வெளிநாடு கடத்தி செல்ல இருந்த முயற்சியை முறியடித்து சாமி சிலைகளை மீட்ட சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாரின் பணியை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டி உள்ளார்.

Related Tags :
Next Story