காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 May 2022 3:09 PM IST (Updated: 6 May 2022 3:09 PM IST)
t-max-icont-min-icon

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். 

இந்த கூட்டத்தில் இரண்டு விஷயங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது வரும் 9, 10 ஆம் தேதிகளில் உள்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவதாக விசாரணைக் கைதி விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story