நுங்கு பறிக்க ஏறிய போது பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானார்.
திருபுவனை
நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய கல்லூரி மாணவர் தவறி விழுந்து பலியானார்.
கல்லூரி மாணவர்
புதுவை கிருமாம்பாக்கம் அருகே மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் அபிசுதன் (வயது 21). தாகூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். விடுமுறை விடப்பட்டதையொட்டி திருபுவனை பெரியபேட்டில் உள்ள தனது மாமா வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சந்தோஷ், விஷ்வா, முருகன் ஆகியோருடன் நுங்கு வெட்டுவதற்காக மதகடிப்பட்டு பெட்ரோல் பங்க் பின் பகுதிக்கு சென்றனர்.
அங்கிருந்த ஒரு பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக அபிசுதன் ஏறினார். மரத்தின் உச்சிக்கு சென்ற அவர் காய்ந்த மட்டையை பிடித்த போது அது பெயர்ந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பரிதாப சாவு
இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அபிசுதனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story